
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலாஜி (வயது-42) இவர் ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மகேஸ்வரி தனது மகளை அருகே உள்ள டியூஷன் அழைத்துச் சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக பீரோவில் பார்த்த பொழுது அதில் இருந்த 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது கண்டு மேலும் அதிர்ச்சடைந்தார்.
இது தொடர்பாக பீர்க்கன்கரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து மகேஸ்வரி கூறும் போது தனது குழந்தை சிறப்பு குழந்தை என்றும் 13 ஆண்டுகளாக இதே வீட்டில் குடியிருந்து வருவதாகவும்
தனது குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் (மன வளர்ச்சி குன்றிய) சிறுக சிறுக பணத்தை சேர்த்து நகைகளை சேர்த்து வைத்தோம் யார் எடுத்தாலும் எனது நகையை திரும்ப தந்து விடுங்கள் என கண்ணீர் மல்க கொள்ளையனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டப் பகலில் மக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதியில் கொள்ளையன் கைவரிசை காட்டிய சம்பவத்தால் இந்த பகுதி உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
