மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அத்துமீறி அதிகாரிகள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி இரவு நேரத்தில் அமைக்கப்படும் புதிய ராட்சத பேனர்கள் உயிர் பலி ஏற்படும் முன் தடுக்குமா?

மக்கள் நலனை கருத்தில் கொண்டுஉடனே அகற்ற கோரி தாம்பரம் மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.சுரேஷ் ஆணையர் பாலச்ந்தரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த அனுமதியும் இன்றி அமைக்கும் விளம்பர ஏஜென்சிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது.
தமிழகதில் தற்போது வரை எங்குமே ராட்சத விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக் கொடுக்காத நிலையில் தாம்பரம் மாநகர பகுதிகளில் தினம் தினம் அத்துமீறி சட்ட விரோதமாக புதிது புதிதாக வைக்கப்படும ராட்சத விளம்பர பலகையால் அவ்வப்போது பெறும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் நிகழ்கின்றன.
சென்னை தாம்பரத்திற்க்குட்பட்ட ஜி எஸ் டி சாலையில் கடப்பேரி பகுதிகளில் புறம்போக்கு இடத்தில் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வணிக வளாகங்கள் கடைகள் என கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
இதனால் ஜி எஸ் டி சாலையில் தினம் தினம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சொல்லல்லா துயரத்திற்க்கு ஆளாகின்றனர்.

இது ஒரு புறம் இருக்கு புறம்போக்கு இடத்தில் எந்த ஒரு அனுமதியும்
தாம்பரம் மாநகராட்சியில் கடப்பேரி ஜி எஸ் டி சாலையோரம் மாடிகளில் கடைகளை கட்டி தனி நபர்கள் வாடகை விட்டு வருமானம் பார்த்து வரும் நிலையில்.
இதில் சிலர் அந்த புறம்போக்கு இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல் அதன் மாடியில் பிரமாண்ட ராட்சத பேனர்கள் மற்றும் யூனிபோல் எனகூடிய ராட்சத குழாய் டெவர்போன்ற வடிவில் பிரமாண்ட ராட்சத பேனர்களை வைத்துள்ளானர்.
இதனை கவனிக்க கூடிய தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் (டி.பி.ஐ-) நகரமைப்பு ஆய்வாளரோ அல்லது அவருக்கு மேல் அதிகாரியான
(டி.பி.ஒ) நகரமைப்பு அதிகாரியோ எந்த ஒரு நடவடிக்கைகள் மேற்க்கொள்வதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளாது.

இது போன்று ராட்சத பேனர்கள் அமைக்க தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ,நகராட்சி ஆணையர், ஊராட்சி செயலர், போக்குவரத்துதுறை,
தீயணைப்புதுறை,காவல்துறை, வருவாய்துறை,
நெடுஞ்சாலைதுறை, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட எந்த ஒரு துறையிலும் அனுமதி வாங்காமல் தகவல் கூறாமல், ராட்சத பேனர் அமைக்க அதற்கான ராட்சத இரும்பு சட்டங்களை இரவோடு இரவாக கமுக்கமாக புதிய விளம்பர ராட்சத பேனர் அமைத்து விடுகின்றனர்.
இது தினம் தினம் நடைபெற்று வருகிறது.
அனுமதியின்றி இதுபோன்ற ராட்சத விளம்பர பேனர்களை வைத்தால் பல்வேறு கடும் நடவடிக்கைகள் உள்ள நிலையில் ,தற்போதும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர், பீர்கன்கரணை,வானியங்குளம் பகுதியில் அனுமதியின்றி ராட்சத தூண்கள் அமைத்து அதில் ராட்சத பேனர்களை தாம்பரம் மதுரவாயில் மேம்பாலம் மீதும் மற்றும் தாம்பரம் மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் அமைக்கபட்டுள்ளது.
இது போன்று வேளச்சேரி பிரதான சாலை முழுவதும் ராட்சத விளம்பர பலகை ஆக்கிரமித்து உள்ளன.
இதற்க்கும் அனுமதி உள்ளதா என கண்கானித்து மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளில் மீது கழன்று விழும் முன் அனைத்தையும் அகற்றிடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
இதனிடையே தாம்பரம் மாநகராட்சி குட்பட்ட 4 வது மண்டலம் 33 வது வார்டில் ஜி எஸ் டி ரோட்டில் சானடோரியம் முதல் கடப்பேரி வரை அரசு புறம்போக்கு இடத்தில் மற்றும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து எந்த ஒரு அனுமதியும் பெறாமல் ராட்சத விளம்பர பலகை வைத்திருபதாகவும் அது மிகவும் பழுதடைந்து துருப்பிடித்து காணப்படுவதால் காற்றடித்தால் அப்படியே சாலையில் சாய்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அபாய நிலையில் உள்ள அனைத்து அனுமதியின்றி வைக்கபட்டுள்ளா? என கண்டறிந்து ராட்சத விளம்பர பேனர்களை உடனே அகற்றி தர வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி 33 வது திமுக வார்டு மாமன்ற உறுப்பினர் சி சுரேஷ் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.