சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழா சென்னையில் நடைபெறுகிறது.இதனைபோல், மற்ற மாவட்டங்களில் நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, பொங்கல் விழா சென்னையில் 6 இடங்களில் நடத்த உள்ளோம் என தெரிவித்தார் .
மேலும் இணையதளங்கள் வழியாகவும் நடத்துவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சூழ்நிலைகளை பொறுத்து முதல்வர் ஆலோசனை செய்து நடத்துவதற்கு வழிவகை செய்வோம் என்றார். தற்போது கீழடியில் அகழாய்வு பணிகள் முடிக்கப்பட உள்ள நிலையில் அடுத்த கட்ட அகழாய்வு நடத்துவதற்கு சில இடங்களை தேர்வுசெய்து உள்ளோம் என தெரிவித்தார்.
விருதுநகரில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலியில் துளுக்கற்பட்டி, தர்மபுரியில் பெரும்பாலை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடத்துவதாக தெரிவித்தார். .மேலும் , தாமிரபரணி ஆற்றின் வழியிலே இருக்கக் கூடிய இடங்களில் முதல் கட்டமாக களஆய்வுகளை மேற்கொள்ள அறிவிப்புகளை செய்திருக்கிறோம் என கூறினார்.
இந்தியாவிலேயே 5 கோடி ரூபாய் அகழாய்வு பாதுகாப்பிற்காக முதலமைச்சர் வழங்கியுள்ளதாக கூறினார்.தமிழ் மொழியின் தொன்மையை நிறுவுவதற்கும், அறிவுப்பூர்வமான சான்றுகளை தருவதற்கு தமிழக அரசு நிச்சயமாக உருவாக்கும் எனவும் கீழடியின் அருங்காட்சியம் பணிகளுக்காக 12 கோடி செலவில், 34 ஆயிரம் சதுரடியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாக அறிவித்தார்.