கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் விஜய்(30). இவரது மனைவி அபிராமி(25). இத்தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் இருந்தனர் விஜய்க்கு ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் பணி, ஆனால் அவர் நேரம் காலம் பாராமல் உழைத்து வந்திருக்கிறார். வீட்டிற்கு பெரும்பாலும் வராமல் கூட வேலை பார்த்து வந்திருக்கிறார்.
அப்போது பிரியாணி டெலிவரி செய்த சுந்தரம் என்பவர் அபிராமிக்கு கூடுதலாக பிரியாணி கொடுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக தொடர்ந்திருக்கிறது. கள்ளக்காதலனை விட்டு குடும்பத்தை கவனி என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள் .
ஆனால் கணவனும் குழந்தைகளும் தேவையில்லை கள்ளக்காதலனும் அந்த உல்லாச வாழ்க்கையும்தான் அவசியம் என்று கணவன், குழந்தைகளை கொள்ள திட்டம் தீட்டினார் . இதில் கணவன் உயிர் தப்பியதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக பலியாகினர் .
செய்தியாளர் ஜெபராஜ்