• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ByA.Tamilselvan

Jul 28, 2022

விலைவாசிஉயர்வு உள்ளிட்ட மக்களின் பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்திய மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் (மக்களவை 4, மாநிலங்களவை 20) செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சுஷிர் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், சுயேட்சை எம்.பி. அஜித்குமார் புயான் ஆகியோர் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.