அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2023 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டி லட்சுமி துரைசாமி மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தும், நம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பொங்கல் பரிசாக அ.தி.மு.க ஆட்சியில் ரூ.2,500 கொடுத்தபோது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 தருவோம்' என்றார் மு.க.ஸ்டாலின்.ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் ரூ.1,000 மட்டுமே கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் விரைவில் 100 யூனிட் இலவச மின்சார மானியத்தையும் தி.மு.க அரசு ரத்து செய்யப்போகிறது. அடித்தட்டு மக்களைப் பற்றி எந்தக் கவலையும்படாமல் அ.தி.மு.க அரசு மக்களுக்குக் கொடுத்துவந்த பல்வேறு சலுகைகளையும் பறித்துக்கொண்டதால், மக்கள் தி.மு.க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதை அறிந்துதான் இந்தத் தொகுதியில் தி.மு.க போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டது. இந்த முறை கிழக்குத் தொகுதியில் நாம் பெறப்போகும் வெற்றியானது தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையப்போகிறது" என்றார்.த.மா.கா மாநில இளைஞரணிச் செயலாளர் யுவராஜா பேசுகையில்,
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து த.மா.கா சார்பில் நான் போட்டியிட்டபோது 59,000 வாக்குகளைப் பெற்றேன். இந்த வாக்குகள் இங்கிருக்கும் அ.தி.மு.க-வினரின் வியர்வையில் கிடைத்தவை. இந்த இடைத்தேர்தலில் நம்முடைய கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது மக்களை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க திரளாக அழைத்து வர வேண்டியதுதான். கடந்த தேர்தலில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் 75% வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினார்கள். அதேபோன்று மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்துவந்து அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் செய்தால் நாம் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், `
இந்த தேர்தல் அதிமுகவுக்கு சோதனை காலம் அதை நாம் சாதனையாக மாற்ற வேண்டும் காரணம் என்னவென்றால் ஓபிஎஸ் டீம் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று திமுகவுடன் கைகோர்த்து B டீம் ஆக செயல்படுகிறது. ஆனாலும் அவர் கனவு பலிக்காது இது அதிமுகவின் கோட்டை சென்ற முறை சிறு தோய்வு, கவனக்குறைவு காரணமாகவே நாம் தோற்றோம். 4 ஆண்டு கால எடப்பாடி ஆட்சியில் மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தனர். சென்ற முறை 49 தொகுதிகளில் நாம் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி சந்தித்தோம். அதற்கு முக்கிய காரணம் கவன குறைவு காரணத்தால், ஒற்றைத் தலைமையில் இருந்தால்தான் நாம் திமுகவை தோற்கடிக்க முடியும். நானும் செங்கோட்டையனும் எவ்வளவோ ஓபிசியிடம் பேசிப் பார்த்தோம். ஆனால் அவர்கள் திமுகவுடன் கைகோர்த்து நம்மை தோற்கடிக்கும் முயற்சியிலேயே இருந்தனர். இந்த இடைத்தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல் நகரப் பகுதி அதிகமாக இருப்பதால் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் நோட்டீஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் நம் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் வாக்கு சேகரிக்க வேண்டும். விடியா அரசு திமுக ஆட்சியில் கஞ்சா, கள்ளல் லாட்டரி, 24 மணி நேரம் மதுபான கூடம், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவை மக்களும் எடுத்துச் சொல்லி ஓட்டு சேகரிக்க வேண்டும். கடைசி இரண்டு நாள் பணி மிக மிக முக்கியமான பணி 27 தேதி யார் யார் நமக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்த்து வாக்குச்சாவடிகளுக்கு அவர்களை வரவழைத்து வாக்களிக்க செய்ய வேண்டும். திமுகவை பற்றி பத்திரிகைகளில் எந்த செய்திகளும் வருவதில்லை. இரவு 7:00 மணி இருந்து எட்டு மணி வரை நாலு பேரை அமர்த்தி அதிமுகவை பற்றி திட்டினால் மட்டுமே டிவி ஓடுகிறது தற்போது நிலைமை அப்படி உள்ளது. அதனால் இதற்கு அப்பாற்பட்டு வீடு வீடாகச் சென்று பெண்களைப் பார்த்து அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளை பற்றி பேச வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகள் காலத்தில் இத்தொகுதியில் ஏதாவது ஒரு பணி நடந்ததா என்று சுட்டி காட்ட வேண்டும் அப்பதான் நாம் வெற்றி பெறுவதில் எந்த மாற்றமும் கிடையாது. மக்கள் தயாராக இருக்கிறார்கள் நமக்கு வாக்களிக்க அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியாக பார்த்தோம் என்றால் 20% வாக்காளர்கள் வெளியூரில் இருப்பார்கள், அல்லது வேறு பக்கம் இருப்பார்கள். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அதிகாரிகள் பூத் சிலிப்பை திமுகவிடம் கொடுத்து கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. மின் கட்டணம் கடுமையாக உயரப்போகிறது ஜூன் மாதம் 6% அடுத்த ஜூன் மாதம் 6% திமுக ஆட்சி முடிவுக்கு வருவதற்குள் 25 சதவீதம் மின் கட்டணம் உயரும். கல்வி கட்டணம் ரத்தில்லை, அம்மா கொண்டு வந்த லேப்டாப் திட்டம், அம்மா ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் இந்தத் தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. திமுக காரர்களே அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் காரணம் டாஸ்மாக் டாஸ்மார்க் மொத்த கண்ட்ரோலும் யாரிடம் இருக்கிறது என்று உங்களுக்கு எல்லாம் நல்லா தெரியும், திமுக தொண்டர்களுக்கு டாஸ்மார்க் மூலம் தீபாவளிக்கு 2000 பொங்கலுக்கு 2000 மட்டுமே கொடுக்கிறார்கள். திமுக தொண்டர்கள் அனைவரும் அதிமுக வாக்களிக்க தயாராக உள்ளனர். இதில் நாம் தோற்றால் மக்களை குறை சொல்லக்கூடாது நம்மில் தான் தப்பு உள்ளது என்று பேசினார்.


அதை அடுத்து பேசிய செங்கோட்டையன்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் வெல்ல முடியாத இயக்கம் என்ற வரலாற்றைப் படைத்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.
அவரின் வாரிசாக வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றியவர், அரசியல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர்..
ஈரோடு கிழக்கு தொகுதி என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எக்கு கோட்டை என்பதை நிரூபித்து காட்டுவோம்..
கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று இங்கு வெற்றியை போல் தமிழகத்தில் எங்கும் இல்லை என்னும் சாதனையை நிகழ்த்துவோம்…சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கிராமம்,நகரம், மாநகரம் என வேறுபாடு உடையது…
கிழக்கு தொகுதியை பொருத்தவரையில் வெளியூரில் தங்கி இருக்கும் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி…வாக்காளர்கள் எங்கே உள்ளனர் என தேடிச்சென்று வாக்கு சேகரிக்கும் போது தான் 80 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை பெற முடியும்….ஒற்றை தலைமை விவகாரத்தில் 98.5% அதிமுகவினர் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் தான் தற்போதைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது..
கிழக்கு சட்டமன்ற தேர்தலில் பொருத்தவரையில் மாற்றத்தை உருவாக்கும் தேர்தல், கிழக்குத் தொகுதியில் திருப்புமுனையை உண்டாக்கினால் எதிர்காலத்தில் அண்ணா திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்னும் வரலாற்றை படைப்போம்….
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கேவி ராமலிங்கம்,கே சி கருப்பண்ணன், தங்கமணி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன், சத்யபாமா, சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு சிவசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலிமதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, […]
- திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபர் கொலைதிருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள் பழிக்குபழியா என திருப்பரங்குன்றம் போலீசார் […]
- இயக்குனர் டி.பி கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலிசென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் இவரது […]
- சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலைசேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் […]
- ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து […]
- சித்தார்த் படம் தொடக்கவிழாசித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் 5.2.2023 காலை 11மணிக்கு மிக எளிய […]
- “குற்றம் புரிந்தால்”
நீதியை கையில் எடுக்கும் ஹீரோஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு […] - உடல் எடையை குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாஉடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர […]
- பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை..!!மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.பிரபல […]
- தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார்… ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நடைமுறையில் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற உத்தரவை […]
- அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் […]
- நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழாநீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் […]
- உதகை எல்க்ஹில் முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா…மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கும் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் […]
- வெறிச்சோடி உதகை ரோஜா பூங்காவார விடுமுறையான இன்று உதகை ரோஜா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள்…சுற்றுலா நகரமான உதகைக்கு […]