• Sat. Apr 27th, 2024

தை அம்மாவாசையான இன்று பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க

ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் ,,
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி அங்குள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் , தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். கடந்த 18 மாத கால ஆட்சியில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த விளக்கப் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்யப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை குறித்தும் விளக்கி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, “தேர்தல் பணிகளை முன்கூட்டியே துவக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாகவும், ஆட்சியின் சாதனங்களை சொல்லி வாக்கு கேட்பதாகவும் தெரிவித்தார் .மேலும் ,பல்வேறு அமைச்சர்களும் திமுக கழக நிர்வாகிகளும் பிரசாத்திற்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்திற்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் முத்துசாமி தெரிவித்தார். பிரச்சார இடையில் வந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துச்சாமியுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.


வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்தார். திமுக அரசின் ஒன்றரை ஆண்டு சாதனையை வீடு வீடாக விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.கடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக நகர்நல பணிகள் எதுவும் நடைபெறவில்லை.அதனை இந்த ஒன்றரை ஆண்டில் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னமும் வளர்ச்சி பணிகள் நடைபெறும்.அதிமுக மற்றும் எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரத்தை பொதுமக்கள் வாக்கு அளித்து திமுக கூட்டணியை வெற்றி பெற செய்து முறியடிப்பார்கள் என தெரிவித்தார்
வாக்கு சேகரிப்பின் போது திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *