• Thu. Dec 12th, 2024

21-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

ByA.Tamilselvan

Aug 17, 2022

வரும் 21 ம் தேதி தமிழக முழுவதும் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.