குமரி மேற்கு மாவட்டத்தில் 3080 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்.
குமரி மாவட்ட பகுதியான தக்கலை அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில்.இன்று மாலை(பெப்ரவரி_3)ல் திருவட்டார், கல்குளம், விளவங்கோடு, மற்றும் கிள்ளியூர் வட்டங்களை சேர்ந்த 3080 பயனாளிகளுக்கு பல்வேறு விதமான பட்டாக்களை தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டாக்களை வழங்கினார்.…
ஐ.ஆர்.20 நெல் ரகத்தை செம்மண் நிலத்தில் விளைவித்து காட்சி படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த பல்வேறு வகையான அறிவியல் பொருட்களையும், தமிழர் வரலாறு குறித்தும், இயற்கை…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்பெண்களுக்கு ஒரு வருட இலவச மெமோகிராம் சிகிச்சை
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு, பாதுகாப்பு தகவல்களுடன் கூடிய டைனமிக் கியூ ஆர் கோடு, பெண்களுக்கான இலவச மேமோகிராம் சிகிச்சை திட்டத்தினை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி துவக்கி வைத்தார்.கோவை ஆவாரம்பாளையம் பகுதியில்…
போதையில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
சூலூரில் போதையில் மது பாட்டிலை உடைத்து மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மது…
மல்லிகையில் மலர்ந்த பேரறிஞர் அண்ணாவின் முகம்
கோவையில், பேரறிஞர் அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற வாசகத்தை நினைவு கூறும் வகையில், ஓவியர் ஒருவர் மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து அசத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்…
நத்தத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில், தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் :சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி…
தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பிரமுகர் – நன்றி தெரிவித்த கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்துக்கொடுத்த நிலையில் அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கையை சேர்ந்தவர்…
மதுரைகோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம்
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை திருத்தலத்தின் 104 -ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை வடக்கு மறைவட்ட அதிபர் அருளானந்தம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர், ‘லூர்து அன்னையின் பாதையில் நம் பயணம்’ என்ற தலைப்பில் மறையுறை ஆற்றினார்.…
அப்பல்லோ மருத்துவமனையின் அன்மாஸ் கேன்சர் திட்டம் அறிமுகம்
புற்று நோய்க்கு பிந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆய்வாக அன் மாஸ் கேன்சர் புற்றுநோய் பற்றி சரியான தகவல்களை வழங்குவது என்ற புரட்சிகரமான திட்டத்தை அப்பல்லோ கேன்சர் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது.புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவில் இருந்து வெளிக்கொண்டு வருவது அது…




