

சூலூரில் போதையில் மது பாட்டிலை உடைத்து மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மது போதையால் வீட்டில் இருந்த மது பாட்டிலை உடைத்து அவரது மனைவியான பத்மாவதியின் கழுத்தில் குத்தி கொலை செய்த வழக்கில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து மத்திய சிறையில் அடைத்திருந்தனர். மனைவியை கொலை செய்த வழக்கானது கோவை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து குற்றவாளியான ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

