• Sun. Mar 16th, 2025

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் :சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ByKalamegam Viswanathan

Feb 3, 2024

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முன்னாள் செயலாளர் முனியாண்டி, கோயில் செயல் அலுவலர் இளமதி, பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, முத்து செல்வி, சதீஷ், கொத்தாலம் செந்தில், நிஷா கௌதமராஜா, செல்வராணி, சிவா நிர்வாகிகள் சங்கங்கோட்டை ரவி, சந்திரன், மில்லர் மற்றும் பணியாளர்கள் பூபதி, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.