திரும்பி பார்ப்போம் என்றும் இளமை மாறாத இயக்குநர் – ஸ்ரீதர்.
மதுராந்தகத்தில் 1933ல் பிறந்து தன் முயற்சியில் பின்னாளில் கல்லூரிமாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்…. அவருக்குக் கிடைத்ததே. அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர்…
900 கோயில்கள் கொண்ட உலகின் ஒரே அதிசய மலை!
குஜராத் மாநிலத்தில் உள்ள பலிதானா என்ற இடத்தில் 900 கோயில்களைக் கொண்ட உலகின் ஒரே அதிசய மலையாக அமைந்திருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இந்த மலையானது ஷத்ருஞ்ஜய் மலை என்றழைக்கப்படுகிறது. இந்த மலையின் மேல் சுமார் 900 ஆலயங்கள் அமைந்திருக்கிறது. ஆலயங்கள்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி.., 21பேர் மீது நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு..!
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த் எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம்…
நரபலி மூடநம்பிக்கைகளின் உச்சம் தடுக்க நடவடிக்கை தேவை
கேரளத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையொட்டி, தமிழ்நாட்டிலும்கூட மந்திரம், மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகச் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டுகூட அசாம் மாநிலத்தில் பெற்றோரே தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதை கேட்க முடிகிறது அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூடப் பிற்போக்கான, மூடத்தனமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன அறிவியலின் அத்தனைப் பயன்களையும் அனுபவித்துக்கொண்டே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும் மக்கள் எப்படிஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. புறவுலகில் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் மனிதன் தனது அகத்தைப் பொறுத்தவரையில் இன்னமும் பெரிதும் மாற்றமடையாமல்தான் இருக்கிறான் என்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகிறது. மந்திரம், மாந்திரீகம், நரபலி போன்ற மூடநம்பிக்கைகள் என்பவை பொதுவாகவே நமது கல்விக்கும், பொருளாதார நிலைக்கும் அப்பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகளும், சம்பவங்களும் ஏறத்தாழ அனைத்து நாடுகள், இனங்கள், மதங்களிலும் இருக்கின்றன. அறிவியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மிகவும் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் இருக்கதான் செய்கிறது. அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்குப் பேய்கள், முன்ஜென்மம் போன்றவைமீது நம்பிக்கைகள் இருக்கின்றன என்கிறது. அறிவியலுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட இந்த நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருப்பது ஏன்? அந்த நம்பிக்கைகளின் விளைவாக நரபலியிடுவது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட காரணம் நிறைய நேரத்தில் ஒரு நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான அறிவியல் பூர்வமான எந்த வழிகளை தேடாத நிலையில், ஏதாவது மாயம் நடந்து, நெருக்கடியிலிருந்து வெளியேறிவிட மாட்டோமா’ என மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. இப்படிப்பட்ட பலவீனமான சூழ்நிலையில், உண்மைகளை ஏற்க மறுக்கிறது. இந்த மனநிலையில் உள்ள ஒருவரின் மனதை மிகச் சுலபமாக மூளைச்சலவை செய்து மாற்றிவிட முடியும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருக்கும் பலவீனமான மக்களைக் குறிவைத்தே மூடநம்பிக்கைகள் சார்ந்த பெரும்பாலான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இதிலிருந்து மீட்பதாக மந்திர, மாயக்காரர்கள் விரிக்கும் வலைகளில் இவர்கள் மிகச் சுலபமாக மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். சமூகப் பாதுகாப்பு அதிகம் இல்லாத எளிய மனிதர்களே நரபலி போன்ற கொடூரமான சம்பவங்களுக்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். ஏதேனும் ஒரு பெரிய நெருக்கடியிலிருந்து விடுபட முடியாத நிலையில் இருப்பவர்கள் சக மனிதர்களின் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கையிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். அப்போது பெரும்பாலும் மதகுருமார்கள், மந்திரவாதிகள், பேயோட்டும் ஆசாமிகள் போன்றோரை நாடிச் செல்கின்றனர். ஏனென்றால், தங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இவர்களை நம்புவதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்குத் தென்படுவதில்லை. இப்படிப்பட்ட பலவீனமான மனிதர்களின், உடைந்த மனநிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் மூன்றாம் நபர்கள் தங்களது சக்தியை, வீரியத்தை, மகிமையைப் பரிசோதிப்பதற்கான எலிகளாக இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதோடு, அந்த நெருக்கடியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத எளிய மனிதர்களின் உயிரிழப்பு வரை மோசமான பாதிப்புகளுக்கு இட்டுச்சென்றுவிடுகிறது. அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இந்த மூடநம்பிக்கைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்கின்றன என்றாலும் இந்த மூடநம்பிக்கைகளின் விளைவாக ஒருவர் எந்த அளவுக்குச் செல்கிறார் என்பதைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதுவும் நரபலியிடுவது போன்ற விபரீதமான முடிவினை எடுக்கும் நிலைக்குச் செல்வதற்குப் பின்னால் சமூகரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. நரபலியிடுவது போன்ற கொடூரமான செயல்களைச் செய்யும் நபர்கள் பெரும்பாலும் மனிதப் பண்புகளிலிருந்து பிறழ்வடைந்தவர்களாக இருப்பார்கள். சக மனிதர்களிடம் …
அனைவருக்கும் அரசியல்டுடே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தமிழக மக்களுக்கும் வாசகர்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கு எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் திருவிழாக்கள் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியாமல் போனது தொழில்கள் முடங்கின வருவாய் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சிறு குறு தொழில்கள் முடங்கியது. அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டனர்,பலர் வேலை இழந்தனர்.இந்த சூழ்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாதொற்றின் வீரியம் குறைந்தது. அடுத்து இந்த ஆண்டு அனைத்து பண்டிகைகளும், திருவிழாக்களும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அனைவரும் புத்தாடை வாங்கியும், இனிப்புகளை வாங்கியும் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த தீபாவளியை அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரை அனைவரும் கொண்டாட்டத்தின் முகமாக உற்சாகமாக பட்டாசு வெடிப்பார்கள் அந்தப் பட்டாசை மிகவும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் துணை நிற்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பட்டாசை வெடித்து மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் Thazhali News & Media அரசியல் டுடே சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நாளை தீபாவளி பண்டிகை தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டியை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிமக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.…