விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்து நடனமாடியும் உரியடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…!

சாத்தூரில் புள்ள தனியார் சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர் மேடமணிந்தும், சிறுமியர் ராதை வேடமணிந்தபடி பள்ளிக்கு வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணர் பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் உற்சாக நடனமாடியும் உரியடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர் ஒன்றாக இணைந்து அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணரை வழிபட்டனர். கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர் சிறுமியிருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.









