இன்றைய நாள் முக்கிய நாள் கடமையை செய், பலனை எதிர்பாராத என்று இந்த உலகத்திற்கு உழைப்பதற்கு கற்றுக் கொடுத்து , பகவத் கீதையை நமக்கு வேத புத்தகமாக தந்திருக்கிற பகவான் கிருஷ்ணர் ஜெயந்தியின் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற அந்த உன்னத நிலையை அடைய எடப்பாடியாரின் வழி நின்று வாழ்த்திகிறேன்.

இன்றைக்கு விஜய் தலைவரான தவெக ஆட்சி, நாலாவது மாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆளும் கட்சி முழுமையாக தனது பதவி காலத்தை பூர்த்தி செய்யுமா? என்பது சந்தேகத்துடன் கூடிய கேள்வியாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது .
அதற்கு காரணம் இந்த 112 நாட்களில் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து காப்பாற்றி வருகிற கட்சிகள், ஆளும் கட்சியாக தவெக அரசுக்கு மீது தோன்றியுள்ள நம்பிக்கையின்மை தான் காரணம் .ஆரம்பத்தில் உறுதுணையாக இருப்போம் என்று கூறிய பொதுவுடைமைக் கட்சிகள் தற்போது நிகழ்ச்சிகளில் ஆட்சியில் செயல்பாடு பொறுத்துதான் எங்கள் நிலைப்பாட்டை மேற்கொண்டு இருக்கிறோம் .எங்கள் ஆதரவு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் மிக தெளிவாக ஆணித்தரமாக உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.
ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முன் முன்னிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வந்த நிலையில்,தற்போது விஜய் தான் பிரதமர் அமைச்சர் என்று அமைச்சர்கள் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதிரடி,யாக அறிவித்துள்ளதை கண்டு கலங்கி போயிருக்கிறது காங்கிரஸ் கட்சி .

செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியான ஒரு தனியார் டிவி கருத்துக்கணிப்பில் பிரதமர் பதவியில் ரேசில் மாண்புமிகு மோடிஜி அவர்களும், ராகுல் காந்தி அவர்களும், அதற்கு அடுத்து மூன்றாவது நிலையிலே முதல்வர் விஜய் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. விஜய் தான் அடுத்த பிரதமர் என்கின்ற கோஷத்தால் காங்கிரஸை கடுப்பாக்கி மேலும் ஆத்திரமூட்டியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை .
தன்னுடைய அமைச்சர் பதவியைநான் ராஜினாமா செய்வேன் என்று ராஜேஷ் அதிரடியாக அறிவித்திருக்கிறார், இந்த நிலைப்பாட்டை கண்டித்து
மாணிக்தாகூர் ஒரு படி மேலே சென்று தவெகவினர் தான் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலே இருக்கிறார்கள் என்று கருத்தை கூறியிருக்கிறார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமி காங்கிரஸ் யாருக்கும் அடிமை கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளார் .
தவெக ஆட்சி எண்ணபட்டிருக்கும் நிலையில், இந்த நேரத்தில் 1200 கோடியிலே புதிய தலைமைச் செயலகம் அறிவிப்பை 110 விதியில் வெளியீட்டு இருக்கிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ள வேலை இல்லாதவர்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் , பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், கல்வி கடன் 20 லட்சம்,
குவிண்டால் நெல்லுக்கு 3,500 என அனைத்தையும் நிதி பற்றாக்குறைகளை காரணம் காட்டி தள்ளி வைத்துள்ளார் முதல்வர் விஜய்.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 கேஸ் சிலிண்டர் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்பொழுது ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் உள்ள குடும்பத்திற்கு மட்டும் அதுவும் மூன்று சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நீர்த்து போய் செய்து காலத்தை கடத்தி வருகிறார் .
அதிரடியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக தன்னுடைய செயல்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒன்று, இரண்டு திட்டங்களை அறிவித்துவிட்டு அதையும் அரைகுறையாக நிறைவேற்றி அவர் முழு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன் பாருங்கள் என்று இந்த நாட்டிற்கு சொல்வதற்காக பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்து பொருளாதார வளர்ச்சியை காவு தந்திருக்கிறார் முதல்வர் விஜய்.
முதல் விஜய்யின் இந்த சினிமா பாணிலான முடிவினால் மக்கள் வரிப்பணத்திலே நேரடியாக ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கோடி இழப்பு வரும் என்றும் மறைமுகமாக பல்லாயிரக்கணக்கான கோடிகள் இழப்புகள் ஏற்படும் பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே விஜய் அரசின் உள்கட்டமைப்பு கொள்கையில் உறுதியில்லாத தன்மையில் தமிழ்நாடு 15000 கோடி மதிப்புள்ளான விமான பரிசோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை ஆந்திர பிரதேசத்துடன் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது

பரந்தூர் விமான நிலையம் மதிப்பிடப்பட்ட முதலீடு 27,400 கோடி அதற்கு தேவையான நிலம் 5369 ஏக்கர் ஆண்டுக்கு இரண்டு கோடி பயணிகள் போக்குவரத்துள்ள அதன் திறன் படிப்படியாக 10 கோடியாக உயரும் என்றெல்லாம் திட்டமிடப்பட்டது
மத்திய அரசின் இட அனுமதியும் கொள்கை ரீதியான ஒப்புதலையும் இந்த பரந்தூர் மாநிலத்திற்கு பெற்றிருந்தால் நவம்பர் 2025 வரை 680 கோடி செலவில் பறந்தூர் விமான நிலையத்திற்கு 48 சதவீத நீளம் கைய படுத்திருப்பதாகவும், இதில் இப்போது 1702 ஏக்கர் நிலத்தை இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இப்போது 1702 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு திரும்ப கொடுப்பீர்களா இல்லை வேறு திட்டத்திற்கு பயன்படுத்துவீர்களா? விவசாய நிலத்தில் இருந்து அந்த இழப்பீட்டுத் தொகையை மீண்டும் பெறுவீர்களா என்பதை விளக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மக்களுடைய சந்தேகங்களை சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பினார்.
முக்கியமாக உலகளாவிய முதலீடுகள் ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதற்கும் தமிழகத்திற்கு மீண்டும் சர்வதேச விமானம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.பயிர் சாகுபடி செய்யாத இன்றைக்கு வறட்சியான நீர்நிலைகள் இல்லாத ஒரு நிலத்தை, வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியை கண்டறிந்து ஒரு சர்வதேச விமான நிலையத்தை நாம் நிறுவலாம் என்ற ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
ஆனால் விஜய் இதையெல்லாம் மக்களுடைய வளர்ச்சிக்கான திட்டங்களையும் அல்லது அவருக்கு என்ன விளம்பரம் கிடைக்கிறதோ அந்தத் திட்டத்திற்கான முக்கியத்துவத்தை தருகிறாரா என்று பார்த்தால் ரியல்க்கு தருகின்ற முக்கியத்துவத்தை விட ரீல்ஸ்க்கு தான் முக்கியமாக தருகிறார்கள்
மக்களுடைய வாழ்க்கைக்கு தருகிற லைப்புக்கு தருகிற முக்கியத்துவத்தை விட அவர்களுக்கு கிடைக்கிற லைக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதுதான் இந்த பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஜயயின் இந்த அடாவடியான அதிரடி அறிவிப்பு சினிமா பாணியின் முடிவாக பார்க்கப்படுகிறது இதனால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழக பொருளாதார வளர்ச்சி மீது உருவாக்கப்பட்ட தடையாகவும் இது பார்க்கப்படுகிறது.
எது எப்படி என்றாலும் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் ஆனால் இங்கே ஒரு நிரந்தரம் இல்லாத ஒரு அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இருக்கிற இந்த அரசு ஒரு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதன் காரணமாக குறிப்பாக, காங்கிரஸ்கும்,தவெகவிக்கும் இடையிலே உருவாகி வருகிற இந்த பிரதமர் கோசம் இன்றைக்கு விஜய்யின் ஜால்ரா கோஷ்டிகளால், கூஜாக்களின் ஜால்ராவால் தமிழக சட்டமன்றமே இன்றைக்கு அதிர்ந்து போய் இருக்கிறது.
விஜய் 2029 பிரதமராக வருவாரா ராகுல் பிரதமராக வருவாரா என்று தவெகவும், காங்கிரசும் குழாயடி சண்டை போல அடித்துக் கொள்கிற இந்த சூழ்நிலையிலே இந்த தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடியார் 50 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்
தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் யாரை அவர் முன்னிறுத்தி கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்திய தேசத்தினுடைய பிரதமராக 2029 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.

அதே தேர்தலோடு ஒரே நாடு, ஒரே தேர்தலோடு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர்ராக மீண்டும் அமர்வார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு மனதில் எழுதி வைத்திருக்கிற தீர்ப்பு.
அந்த தீர்ப்பை நிச்சயமாக உறுதியாக வழங்குவார்கள் என்கிற நம்பிக்கையோடு அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழக மக்கள் சேவையிலே மக்கள் பணியிலே எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஏசுவோர் ,ஏசட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அந்த உழைத்துக் கொண்டிருக்கின்ற எடப்பாடியார் தலைமையிலே வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் எனக் கூறினார்.








