தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி பறிமுதல்: பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைப்பு!
வருமான வரித்துறை சோதனையின்போது தொழிலதிபர் வீட்டில் 150 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவரது வீட்டில் இன்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை…
ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து இன்று விடைபெறுகிறேன்,…
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் அ.தி.மு.க., தி.மு.க இடையே சலசலப்பு..!
பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டைதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அர்த்தநாரிபாளையம் ஊராட்சி…
யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி
ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு அகஸ்தியர் ஜெயந்தி தினமான நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. இதற்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து…
ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு
ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,291 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் திருமுறைகளை…
மத்திய அமைச்சரிடம் பணம் கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது!
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.…
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மதுரை விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்…
திரையரங்கு, ஓடிடிக்களில் குவிந்த திரைப்படங்கள்: என்ன பார்க்கலாம்?
இந்த வார இறுதியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறித்து பார்ப்போம். தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழித்திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிக்களில் வெளியாகி உள்ளது. அதில் இன்று வெளியான திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் குறித்தும் கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம். திரையரங்குகள்…
கருணாநிதியின் நட்பை மட்டும் விரும்பிய தோழமை
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக காரணமாக இருந்த கவுண்டம்பட்டி முத்து (96), வயதுமூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கலைஞரின் நட்பை மட்டும் தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை…



