• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்!!

BySubeshchandrabose

Mar 12, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருக்கின்றார்.

இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் அதே பகுதியில் அரசு மதுபான பார் நடத்தி வரும் சுதாகர் என்பவர் உடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் ஸ்டீபன் பாரில் பணிபுரியும் மதன் என்பவர் சுதாகர் நடத்திவரும் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தி கொண்டிருக்கும்போது அங்கே கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் உடன் தகராறு ஏற்பட்டு 3 பேர் சேர்ந்து மதனை தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து சுதாகர் தூண்டுதலின் பேரில்தான் தன்னிடம் பணிபுரியும் மதனை தாக்கியதாக நினைத்து ஸ்டீபன் தூண்டுதலின் பேரில் தனுஷ் மற்றும் இருவர் சேர்ந்து சுதாகரின் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

இதனால் ஹோட்டலில் உள்ள பொருட்கள் மற்றும் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளது இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் ஸ்டீபன், தனுஷ் விமல், சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

இருதரப்பினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.