• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு உணவகங்கள் மூடப்படும் அபாயம்..,

BySubeshchandrabose

Mar 12, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் நேரம் குறைக்கப்பட்டு ஒரு சில உணவுகள் மட்டும் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரக்கூடிய நாட்களில் மேலும் சிலிண்டரின் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் முழுவதுமாக மூடப்படும் நிலை உள்ளதால் தேனி மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ஹோட்டல் உரிமையாளர் கலந்துகொண்டு சிலிண்டர் தட்டுப்பாட்டு குறித்தும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் செயல்படுவதற்கு மாற்று வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர்

சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படாது என தெரிவித்தனர்.

அனைத்து ஹோட்டல்களிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவுகளை தயார் படுத்த வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இருக்கின்ற சிலிண்டர்களை சிக்கனமாக பயன்படுத்தி உபயோகப்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு சிலிண்டர் விற்பனை செய்தால் அதனை ஹோட்டல் உரிமையாளர்கள் யாரும் வாங்க வேண்டாம் அவர்கள் குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

விறகு அடுப்பை பயன்படுத்துவது தற்காலிக முடிவு தான் விறகு அடுப்பில் சமையல் செய்யும் மாஸ்டர்களும் தற்போது இல்லை இதனால் மேலும் உணவகங்களில் நேரம் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

மின் அடுப்புகள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு இருக்கின்றது இதனால் விறகுகள் வைத்து உணவு தயார்படுத்த உள்ளோம்.

அரசு முழு சிலிண்டர் கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை அரை சிலிண்டர் கொடுத்தால் கூட நேர கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து உணவுகள் வினியோகம் செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.