• Fri. Apr 19th, 2024

20 மாதங்களுக்குப் பிறகு.. மும்பையில் பள்ளிகள் திறப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று முதல் (டிச.15) 1 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டபடி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கரோனா முதல் அலையின்போதே கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்கள் பள்ளிகளைத் திறந்து வருகின்றன.

பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் 20 மாதங்களுக்குப் பிறகு மும்பை மாநகராட்சியில் 1 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி வரும் மாணவர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து, சமூக இடவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்து வகுப்புகள் நடத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *