

தமிழக முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமுழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பிரசீலனை செய்வதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்துவரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணமாக உள்ளது.
