• Fri. Apr 19th, 2024

1 கிலோ டீ… 1 லட்சம் ரூபாயா..

Byகாயத்ரி

Jun 23, 2022

இந்தியாவில் பல்வேறு வகையான டீ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது.

அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் அரிய ரக டீ ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கோலகாட் என்ற மாவட்டத்தில் பாபோஜன் கோல்டு டீ என்ற புதிய அரிய வகை டீ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு டீ தயாரிக்கும்போது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஒரு சுவையான டீ நமக்கு கிடைக்கும். அதனால் இதற்கு டிமாண்ட் அதிகம். அதன் காரணமாக இதன் விலையும் மிக அதிகம் தான். இந்நிலையில் ஜோர்ஹாட் டீ ஏல மையத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி இது ஏலம் விடப்பட்டது.

அப்போது இந்த டீ கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனை அசாமை சேர்ந்த பிரபல டீ பிராண்டாக விளங்கும் எஸா நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலமாக தங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்க முடியும் என்ற நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *