• Fri. Apr 26th, 2024

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது -திரெளபதி முர்மு

ByA.Tamilselvan

Jun 22, 2022

குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு தான் செய்யப்பட்டது குறித்துகூறும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என பேட்டியளித்துள்ளார்
குடியரசுத் தலைவருக்கான பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
ஜூலை 18-ந்தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பா.ஜ.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்திரெளபதி முர்மு அளித்த பேட்டியில், “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை. நன்றி உள்ளவராக இருக்க கடமைப்பட்டுள்ளேன். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் பெறுவேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *