• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் பங்கில் ஆயுதங்களை காட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளை; போலீசார் வலைவீச்சு..

By

Sep 10, 2021 ,

ராமநாதபுரம் மாவட்டம் கீழாக்கறைக்கு அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி, அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி 1.70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட தகவலின் படி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து, ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் தெரிகிறது. இச்சம்பவத்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு அவர்கள் வந்த வாகனத்தை கிராம பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் வாகனத்தில் பதிவு எண் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.