சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக மாற்றுப்பாதையில் செல்ல இந்தியில் வைக்கப்பட்ட பேனருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டியில் இருந்து – ஆத்தூர் வரை சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும், இதன் ஒருபகுதியான செல்லியம்பாளையம் முதல் கொத்தாம்பாடி வரை சாலைசீரமைக்கும் பணி நடைபெற்று அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து மாற்றுப் பாதையில் செல்லவும் என்ற அறிவிப்பு ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
எனவே கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் ஆங்கிலம், இந்தியில் பேனர் வைக்கப்பட்டுவதால் வாகன ஓட்டிகள் சீரமைக்கும் சாலையிலேயே செல்வதாக குற்றசாட்டு வைத்தனர்.