

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த வெங்கடேஸ்வரபுரத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் இல்லம் செல்வோம்- உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பண்டரி நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பால குருநாதன், மாவட்ட செயலாளர் அருள் செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பொதுச்செயலாளர்கள் லிங்கவேல் ராஜா, குமரகுருபரன். மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வளர்மதி. ஓன்றிய ஐடி பிரிவு தலைவர் விவேகானந்தன். இளைஞரணி தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

