


திமுகவில் கடந்த மூன்றாம் தேதி இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மிகப்பெரிய பிரமாண்ட கூட்டத்தை கூட்டி மாற்றுக் கட்சியினரை திமுக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆமா மு க வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த பழனியப்பன் கடந்த வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார் இணைத்துக் கொண்டதற்கு பிறகு அவரை அ.ம.மு.க கட்சியினர் தொடங்கி பிற கட்சியினரும் சந்திக்க தொடங்கினர். அவர்களிடம் எல்லாம் பேசி கிட்டத்தட்ட 50-ஆயிரம் மேற்பட்ட திமுக படிவங்களை கொடுத்து எனக்கு முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் எல்லாம் இணைப்புப் படிவத்தை கொடுத்ததோடு எப்போது திமுகவில் இணையலாம் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதை உணர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இந்த புதிய கட்சி உறுப்பினர்களுக்கு தி.மு.க உறுப்பினர் அட்டையை திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கையில் வைத்து புதிதாக கட்சியில் இணைய இருக்கும் நிர்வாகிகளுக்கு கொடுக்க மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக அம்மாவட்ட தி.மு.க தரப்பினர் சொல்கிறார்கள். இந்த இணைப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாள் கொடுத்ததும் இந்த விழா மிகப்பெரிய அளவில் நடக்குமென சொல்கிறார்கள் அங்கிருக்கும் தி.மு.க உடன் பிறப்புகள்.

