• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது..

Byadmin

Jul 28, 2021

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை ஆரப்பாளையம் சந்திப்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறக் கோரியும், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மதுரை கரிமேடு காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.