• Wed. Mar 19th, 2025

டெல்லியில் சர்ச் இடிக்கப்பட்டதற்கும், ஸ்டென்ஸ்சாமி மர்ம மரணத்திற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

Byadmin

Jul 24, 2021

டெல்லியில் கிறிஸ்துவ தேவாலயம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாதிரியார் ஸ்டான்சாமி மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டில் சனியன்று கிறிஸ்துவ மக்கள் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர அமைப்பாளர் சீலன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஆரோக்கியம்,  சிபிஐ மாவட்டச்செயலாளர் மணிகண்டன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச்செயலாளர் காளிராஜ் மற்றும் பெரியாரிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.