• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம்..,

BySeenu

Apr 28, 2026

கேரளா மாநிலம் திருச்சூர் இரிஞ்சலாக்குடா பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீ ருத்ர பீடம் சார்பில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம் மே 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.

உலக அமைதி மற்றும் செல்வம் செழிக்க வேண்டி இந்த சிறப்பு யாகமானது நடைபெறுகிறது. இதில் மகா கணபதி,காயத்ரி தேவி,மகாலட்சுமி நரசிம்மர்,தன்வந்திரி மூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு மஹா யாகம் நடத்தி பகவான் அருளையும்,பாதுகாப்பையும் பெறலாம் என தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் இருந்து சன்னியாசிகள்,உபாஸகர்கள் மற்றும் பக்தர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் 101 யஜமானர்களும், தர்மபத்னிகளும்,லஷ்மி நாராயணரின் பிரதிநிதிகள் ஆக பங்கேற்கின்றனர்.