கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், பட்டப் படிப்பு வரையிலான கல்வி விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் இன்று தேனி மாவட்டம் பொட்டிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனசாரிப்பட்டி கிராமத்தில் தனது பெற்றோரை இழந்த M. வீர பாலமுருகன்(17) என்ற சிறுவனுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சத்துக்கு உண்டான வைப்பு நிதிக்கான பத்திரத்தை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார்.
சிறுவனின் தந்தை மகாராஜன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி கொரோனா நோய் தொற்றால் காலமானார். தாயார் எம்.மகேஸ்வரி கடந்த மே மாதம் 31ம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.