• Fri. Apr 26th, 2024

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால். சுகாதார துறையினர் விழிப்புணர்வு.

Byadmin

Jul 28, 2021

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் , குறைந்த அளவிலே கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்த முன் வரும் நிலையில் அவர்களுக்கு சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாகர்கோவில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.அங்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுவரை மாவட்ட சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 10,700 பாலூட்டும் தாய்மார்கள் உள்ளார்கள்.அவர்களில் சுமார் 3,800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது . அதேபோல் மாவட்டத்தில் சுமார் 15,000 கர்ப்பிணி பெண்களில் 3000 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது . கொரோனா தடுப்பூசி போடுவதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் , குறைந்த அளவிலே கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் , மீதமுள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களும் , தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வழியுறுத்தியும் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை குமரி மாவட்ட ஆட்சியர்.அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *