• Sun. Feb 9th, 2025

ஆகஸ்ட் 2-இல் நண்பேண்டா ..!

By

Aug 8, 2021

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், ஒலிம்பிக்கில் நட்பை உயர்த்திப் பிடிக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றது!…

டோக்கியோ ஒலிம்பிக்கின் உயரம் பாய்தல் போட்டியின் இறுதி நாளில், கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு வீரர்களும் 2.37 உயரத்தை தாவி ஒரே புள்ளிகளோடு இறுதிச் சுற்றை முடித்தனர். அத்துடன் இரண்டு பேருமே தங்கள் முயற்சியில் தோல்வி அடையவேயில்லை. ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்பதைப் போல 2.39 மீட்டர் உயரத்தையும் எந்த தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

அதில் இருவரும் 3 தவறுகளைச் செய்தனர். இதையடுத்து, இறுதியான வெற்றியாளரைக் கண்டுபிடிக்க கடைசியாக தாண்டுதலை நடத்த நடுவர் முடிவு செய்தார்.
அப்போது, ஒலிம்பிக் போட்டி நடுவரிடம் பார்ஷிம், “இரு தங்கப்தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, இருவரும் தங்கத்தை ஷேர் செய்ய முடியுமா” எனக் கேட்டார். இதற்கு நடுவரும் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதைக் கேட்டவுடன் பார்ஷிம், கியான்மார்கோவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இருவருமே வௌ வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயரம் பாய்தல் என்ற மேடையில் இரண்டு பேருமே நண்பர்களாகவே திகழ்ந்தார்கள். போட்டியின் முடிவில் இரண்டு பேருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கத்தார், இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தனித்தனியாக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு இடையே நட்பு, இணக்கம் இருந்தாலும் கூட பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது.
கத்தாலி மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவரும் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டு, தங்களின் நட்பு தங்கத்தை விட மேலானது என்பதை நிரூபித்துள்ளனர்.