பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளையும் நாலு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றிருக்கிறது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பாமகவின் தற்போதைய தலைவர் ஜி கே மணி பா.ம.க சட்டமன்ற தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர், பா ம க சட்ட மன்ற கட்சி தலைவர், பாமக தலைவர் என மூன்று பதவிகளை ஜி.கே மணியின் வசம் இருப்பதால் அவரிடம் இருக்கும் கட்சியின் தலைவர் பதவியை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கொடுப்பதாக பாமகவில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பாமக தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் அதனால் ஆட்சியை பிடிக்க வில்லை, மேலும் கட்சியில் இளைஞர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையே சிறு இடைவெளி இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உணர்ந்திருப்பதால் ஜிகே மணி இடம் இருக்கும் பா.ம.க தலைவர் பதவியை அன்புமணி ராமதாசுக்கு கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாமக தலைமையிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதோடு கட்சியின் 33வது ஆண்டுவிழாவில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க தலைவராக பொறுப்பேற்பார் என கட்சியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.