
தமிழக அரசையும் முதல்வரையும் ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகர் சைபர் கிரைம் போலீசாரால் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தென்னரசு என்பவர் திமுக அரசை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக பதிவிட்டதாக கூறி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்
அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு .அதிமுக ஒன்றிய விவசாயஅணி செயலாலராக உள்ள தென்னரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி ஆபாசமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தென்னரசுவைப்பற்றி விருதுநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில் இன்று திமுக அரசை பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக பதிவிட்ட தென்னரசுவை நொச்சிகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
