• Fri. Mar 29th, 2024

திருச்சி ஐஐஐடி இயக்குநர் சர்மா பேட்டி….

Byadmin

Jul 29, 2021

ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகளும் படிப்படியாக தொடங்கவும், கலை அறிவியல் படிப்புகளை ஐடியுடன் இணைத்து வழங்கவும் ஏற்பாடு.

திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சேதுராப்பட்டியில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழா வருகிற ஜுலை 31ம் தேதியன்று ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதில் கணிணிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 25பட்டதாரிகளும், மின்னனு மற்றும் தொலைதொடர்புதுறை 25பட்டதாரிகளுக்கும் இளநிலை பட்டம் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த இந்திய தகவல் தொழில்நுட்பக்கழக இயக்குநர் என்.வி.எஸ்.என் சர்மா பேசுகையில்… இதில் திலகர்ராஜர், கந்ரெகுல லலித்பனி ஸ்ரீனிவாஸ் ஆகிய 2மாணவர்களும் தங்க பதக்கம் பெறவுள்ளனர். மேலும் 63சதவீதம்பேர் 3.36லட்சம் முதல் 19.5லட்சம் வரையிலான ஆண்டு சம்பளத்துடன் பணியில் சேர்ந்துள்ளனர் என்றார்.
2009ம் ஆண்டு 20 தொழில்நுட்பக்கழகத்திற்கு மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது என்றும் திருச்சி ஐஐஐடிக்கு 128கோடியில் 50சதவீதம் மத்திய அரசு 35சதவீதம் மாநில அரசு மற்றும் எஞ்சிய தொகை இதர நிதியிலிருந்து பெறப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், 3தளங்களுடன் கூடியவகையில் கல்விவளாகம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதி, கேண்டீன் கட்டப்பட்டுவருவதாகவும், 2மாதத்தில் பணிகள் முழுவதும் நிறைவுபெறும் என்றார்.
முதுகலை வகுப்புகளும் கடந்த ஆண்டுமுதல் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெறுகிறது, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்பட்சத்தில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க உள்ளதாகவும், 5வருடத்தில் 1200மாணவர்களை சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் வகுப்புகள் மேற்கொள்ளப்படும்நிலையில், ஐஐஐடி கான்பூரைப் பின்பற்றி டிஜிடல் மார்க்கெட்டிங் வகுப்புகள், ஆன்லைன் படிப்புகளையும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகளும் படிப்படியாக தொடங்கப்படும், திருச்சி ஐஐஐடி மாணவர்கள் வேறு ஐஐஐடியுடன் இணைந்து பயிலும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டள்ளது என்றார். மேற்கத்திய நாடுகளைப்போல கலை அறிவியல் படிப்புகளை ஐடியுடன் இணைத்து வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *