• Tue. Apr 16th, 2024

அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது” என மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் பேட்டி…

Byadmin

Jul 20, 2021

திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால் தான் மக்கள் திமுகவை தேர்வு செய்து உள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது” என மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் பேட்டி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடன் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது, இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் பங்கேற்பு, முன்னதாக 14,75,522 மதிப்பிலான முதலமைச்சர் நிவாரண நிதி, இலவச வீட்டு மனை பட்டா, இலவச தையல் இயந்திரம் ஆகியவைகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள், பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “முதலமைச்சரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறைய பயனாளிகளை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் மனுக்களை தள்ளுபடி செய்யாமல் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு, வாரம் ஒரு முறை பட்டா மாறுதல் சம்பந்தமாக அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்ய உத்தரவு, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்க உத்தரவு, நில எடுப்பு விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப விரைவில் அறிவிப்பு வழங்கப்படும், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் உத்தரவில் முதல்வர் ஒரிரு நாட்களில் கையெழுத்துதிடுவார், அதன் பின்னர் நில எடுப்பு பணிகள் விரைந்து நடத்தப்படும், திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால் தான் மக்கள் திமுகவை தேர்வு செய்து உள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *