• Fri. Mar 29th, 2024

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி..

Byadmin

Jul 20, 2021

அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு அதன் பிறகு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் – கொரோனோ சூழலை கருத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் – பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.*

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை நடுநிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பின்னர் மாணவர்களின் தனித்திறனையும் பார்வையிட்ட அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.அதன் காரணமாக எங்கு செல்கின்றோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வு செய்கின்றோம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது.ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.கொரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்பட முடியவில்லை.கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர வழைத்து இருக்கிறோம்.முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் அதன் பிறகு எந்த எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும்.

கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்தர ஆய்வகங்கள் 6000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது.உயர்நிலை பள்ளிகளிலும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாததால் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.அங்கு இருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அது குறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.

கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம் என கூறியுள்ளேன். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கொரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும்.

பள்ளி இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். அந்த கணக்கெடுப்பு எடுத்த பின்பு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பள்ளி இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *