திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டி காலனியைச் சேர்ந்த காமாட்சி மகன் ராஜேஷ் ( வயது 21) என்பவர் பிளஸ் 2 படித்துள்ளார் தற்போது கூலி வேலை பார்த்து வருகிறார்.

நேற்று ராஜேஷ் தனது 2 உறவினர்களுடன் சேர்ந்து பொட்டி செட்டிபட்டி ரெயில்வே கேட் என்ற ஒரு தனியார் தோட்டம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது ராஜேஷ் என்பவர் திடீர் என அந்த தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் ஓடி சென்று குதித்தார்.
அந்த 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 3 அடி அளவில் தண்ணீர் இருந்தது ராஜேஷ் கூட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுக்குள் இறங்கினர். அந்த கிணற்றுக்குள் இருந்த ராஜேஷ் சிறிய காயம் இன்றி உயிருடன் மீட்டனர், ராஜேஷ்சை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் ராஜேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்,மேலும்
இது குறித்தும் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்,








