• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாறைப்பட்டியில் பிரச்சனைக்குரிய விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணியினர் கைது..,

Byp Kumar

Sep 14, 2026

திண்டுக்கல் கொடை பாறை பட்டியில் இந்து முன்னணியினர் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை பிரதிஷ்ட செய்து ஊர்வலம் நடத்த முயன்ற போது வருவாய் துரைநர் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்து கோட்டை குளத்தில் கரைத்தனர்.

திண்டுக்கல் கொடை பாறை பற்றி பகுதியில் இந்து முன்னணி சார்பாக காளியம்மன் பகவதி அம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

மேலும் குடை பாறை பட்டியில் விநாயகர் சிலை அமைப்பதற்கோ பிரதிஷ்டை செய்யவும் ஊர்வலம் நடத்தவோ மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையினரும் எந்த விதமான அனுமதிகளும் வழங்கப்படவில்லை.

அரசின் அனுமதியின்றி இந்து முன்னணி சார்பாக பாறைப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு இந்து முன்னணி பிரதிஷ்ட செய்து தடையை மீறி ஊர்வலம் நடத்த முயற்சித்தனர் அப்போது வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் அனுமதி இன்றி நடத்தக்கூடிய பிரச்சனைக்குரிய விநாயகரை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி திண்டுக்கல் கோட்டை குளத்தில் வருவாய் துறையினர் காவல் துறை சார்பாக கரைத்தனர் மேலும் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலம் நடத்த முயன்ற இந்து உன்னை நீரை கைது செய்தனர்.