சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காந்தி தெருவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ராம் கணேஷ் மஹாலில் 23,ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் கூடிய 20-ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி இன்று (செப்.14) தொடங்கியது. செப்டம்பர் 24,வரை 10,நாட்கள் நடை பெறுகிறது.

குரோம்பேட்டை ராதாநகர் கிருஷ்ணமாச்சாரி தெருவைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் 20 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சிலைகளை சேகரித்து இந்த இலவச கண்காட்சியை நடத்தி வருகிறார்.இந்த ஆண்டு கண்காட்சியை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் த.சரத்குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கண்காட்சி அமைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இது சாதாரண கண்காட்சி அல்ல, மனிதனின் அன்றாட வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. விநாயகர் நடந்தால், குளித்தால், படுத்திருந்தால், தாயின் கருவறையில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டென்னிஸ் விளையாடும் விநாயகர்,அருவியில் குளிக்கும் விநாயகர் 10,அடி உயர அரச மர வேர்களால் உருவான பசுமை விநாயகர் அன்ன வாகனத்தில் பறக்கும் விநாயகர், ஏ.ஐ தொழில் நுட்பத்தில் நிலாவில் இருக்கும் விநாயகர்,தேரில் வரும் விநாயகர்,அந்த தேர் தன்னைத் தானே சுற்றும் அமைப்பு சகல தெய்வங்கள், நவகிரகங்கள், தட்சணாமூர்த்தி வடிவில் விநாயகர் பல்பு, டியூப் லைட், பூச்செண்டுக்குள் விநாயகர் சபரிமலை ஐயப்பன் கோயில்,மலைக் கோட்டை விநாயகர் கோயில் மினியேச்சர் வடிவங்கள் பொதுமக்கள் கடமைக்காக அல்ல, உன்னிப்பாக கண்காட்சியை பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் விநாயகர் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனுமதி இலவசம் என்றார்.பொதுமக்கள் காலை 9 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை விநாயகர் கண்காட்சி கண்டுகளிக்கலாம் என தெரிவித்தார்.








