• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் பசுமை தமிழ் நகர் புதிய மனை பிரிவை துவக்கி வைத்த பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்…

ByKalamegam Viswanathan

Sep 14, 2026

மதுரை சோழவந்தான் பேட்டை கிராமத்தில் பசுமை தமிழ் நகர் புதிய மனைப்பிரிவு திறப்பு விழாவில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் பேட்டை பெரியசாமி ராமசாமி டாஸ்மாக் பொன்முடி அண்ணாமலை பில்டர்ஸ் அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கு. ஞானசம்பந்தன் பேசும்போது,

சோழவந்தான் தான் எனது சொந்த ஊர் நான் பிறந்து வளர்ந்த இடம் இந்த மனை பிரிவுக்கு எதிரில் உள்ள பள்ளியில் தான் நான் படித்தேன் அருகில் உள்ள பள்ளிவாசல் பள்ளிவாசல் எதிரில் உள்ள பழைய தாயுமானவர் திரையரங்கம் எனது வாழ்வில் மறக்க முடியாததது நான் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் சோழவந்தானில் உள்ள இந்த பள்ளியும் தாயுமானவர் திரையரங்கம் தான்.

சிறுவயதாக இருக்கும் போது 10 கிலோமீட்டர் தூரமுள்ள அணைப்பட்டிக்கு சைக்கிளில் சென்று பட்டிக்காடா பட்டணமா திரைப்பட சூட்டிங் பார்க்க சென்றது பசுமரத்து ஆணி போல் என் மனதில் நீங்காமல் இன்றும் உள்ளது. அப்போது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காவலர்கள் நிறுத்தி விடுவார்கள் அப்போது தூரத்தில் இருந்து அவர்தான் சிவாஜி அவர்தான் ஜெயலலிதா என பார்த்தது இன்னும் என் நினைவில் உள்ளது.

அதே இடத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினி முருகன் திரைப்படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயனிடம் இது பற்றி எனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காவலர்கள் தடுத்து நிறுத்தி சூட்டிங் பார்த்த அதே இடத்தில் நடிகனாக வளர்ந்து இருந்ததற்கு காரணம் நான் படித்த கல்வி மட்டுமே என்று கூறியதாக உருக்கமாக பேசினார்.

மேலும் தற்போது சினிமா இயக்குனராக உள்ள குட்டிப்புலி இயக்குனர் முத்தையா தன்னுடைய அனைத்து படங்களிலும் மறக்காமல் எனக்கு வாய்ப்பு தந்து விடுவார். அதுவும் குட்டிப்புலி படத்தில் நான் நடித்த டெய்லர் கதாபாத்திரம் மறக்க முடியாததாக இருந்தது மட்டுமின்றி படத்திற்கும் ஒரு முக்கிய திருப்புமுனை கதாபாத்திரமாக இருந்தது.

என்னுடன் சிறுவயதில் படித்த நண்பர் நான் சோழவந்தான் வரும்போது மறக்காமல் என்னை சந்தித்து எனக்கு சால்வை அணிவித்து செல்வார் அவரின் 50 ஆண்டுகால நட்பு என் மனதை நெகிழ வைக்கிறது. தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் சோழவந்தான் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்

இவ்வாறு பேசினார்