• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Selfie எடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்….

Byp Kumar

Sep 14, 2026

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் ஆன 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகரை சுற்றி 5 டன் வண்ண பூக்களால் அலங்காரம் ஏராளமான பக்தர்கள் வரிசையாக நின்று Selfie எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 14.09.26 மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகர் சிலைக்கும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயில் முழுவதும் 5 டன் வண்ணப் பூக்களை கொண்டு மக்களை கவரும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விநாயகர் முன்பு செய்யப்பட்டுள்ள பூக்கள் அலங்காரத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோயிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.