சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பெத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி.(28)கூலி வேலை செய்துவருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம் இதில் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார்.

இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்தியை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், அவளை கர்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் தண்டனையை ஏகாலத்தில் அனுபவிக்கவும் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கவும் இன்று உத்தரவிட்டார்.