• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,

BySeenu

Apr 25, 2026

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் தனது வீட்டின் முன் காரை நிறுத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், நேற்று பகல் 3 மணி அளவில் அல்லது ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில ஹெல்மெட் அணிந்து வந்து இருந்த மர்ம நபர் ஒருவர், காரின் முன்பு வாகனத்தை நிறுத்தி அப்பகுதியை நோட்டமிட்டு உள்ளார்.

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்திலேயே கொண்டு வந்து இருந்த கல்லை எடுத்து, நிறுத்தப்பட்டு இருந்த காரின் முன்பக்கக் கண்ணாடி மீது பலமாக வீசி உள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. கல்லை வீசிய அந்த மர்ம நபர் காரின் அருகே இருந்த சாக்கடையில் எதையோ தேடுவது போல் தேடி விட்டு சிறிது நேரத்தில் அங்கு இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

காரின் கண்ணாடி உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் குமார், அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

நகரில் சிசிடிவி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ள போதிலும், துணிச்சலாக இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை ஒடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.