• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

ByA.Tamilselvan

May 23, 2023

10,11ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைதேர்வுக்ளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி அன்று 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் இதற்கு மே 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ..! இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 27ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஜூன் 27ஆம் தேதி மொழித்தாளும் , 28ஆம் தேதி ஆங்கில பாடமும் , ஜூன் 30-ம் தேதி கணித பாடமும், ஜூலை 1ம் தேதி விருப்பம் மொழி தாளும், ஜூலை 3ம் தேதி அறிவியல் பாடத்திற்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் ஜூன் 4ம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளின் வாயிலாகவும் , தனித் தேர்வுகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூபாய் 500 , 11ஆம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.