விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா .பாண்டியராஜன் பாராட்டி நிதியுதவி வழங்கினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 596 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த மாணவி இ.நாகஜோதி முன்னாள் அமைச்சர் மா.பா..க.பாண்டியராஜன் சந்தித்து ஆசி பெற்றார்..
அப்போது மாணவியை பாராட்டி அவரின் மேற்படிப்பிற்கு உதவியாக 25,000/- ரூபாயை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.உடன் வந்திருந்த பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தார்..