ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படம் விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைக் குவித்தது. நகைச்சுவை நடிகர்-ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’.
சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.
அதில், தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் ‘மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலனின் ஷெர்னி படமும், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘நாயட்டு’ படமும், பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டி
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசு
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!