கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணா
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவி
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்பு
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்