• Sat. Feb 15th, 2025

யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டி

Byகுமார்

Dec 2, 2024

மதுரையில் 87வது தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கலாம் பாரம்பரிய கலை அகாடமியும் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி மற்றும் கலாம் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து நடத்தியது. இந்த யோகாசன போட்டிக்கு கலாம் பாரம்பரிய அகாடமி நிறுவனர் சுந்தர் தலைமையிலும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் பொதுச்சயலாளர் மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த யோகாசன போட்டிகளில் 7 வயது முதல் 80 வயது வரை வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து 23 மாவட்டங்களில் இருந்து 800 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகாசனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் 43 வது தேசிய யோகாசன போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கலாம் பாரம்பரிய கலை அகாடமி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.