பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,யாஷை புகழ்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், கடந்த சில தசாப்தங்களாகக் காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார் யாஷ். 70களில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை நடிகர் யாஷ் அழகான அற்புதத்தை நிரப்பிஉள்ளார்.
கங்கனா ரனாவத் பகிர்ந்துள்ள மற்றொரு பதிவில், யாஷ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரின் புகைப்படங்களைப் பதிவிட்டு, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் தங்கள் கலாசாரத்தில் வேரூன்றி இருக்கிறார்கள். திறமை, கடின உழைப்பு தவிர அவர்கள் கேரக்டர்களின் நம்பகத் தன்மை பார்வையாளர்களை ஈர்க்கிறது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.