தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவர் நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ விரைவில் வெளிவர இருக்கிறது. தெலுங்கில் ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
திருமணம் செய்து கொண்ட பின்னும் சமந்தா முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் தான் இருந்தார். கணவருடன் பிரிவு அறிவித்த பின்னும் சமந்தாவின் சினிமா வாய்ப்புக்கள் குறையவில்லை இருந்தபோதிலும் தன்னை எப்போதும் பொதுவெளியில் பரபரப்குரிய நடிகையாகவைத்துக்கொள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் தனதுசமூக வலைத்தளப் பக்கத்தில் ஆடை குறைப்பு செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சம்பந்தமில்லாமல்அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வெளியிட்டு வருகிறார் பளுதூக்கிய வீடியோ ஒன்றை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் அதற்குக் கிடைத்துள்ளது. அந்த வீடியோவுடன், “வலிமையான உடல், வலிமையான மனம். 2022–23 எனக்கு உடல் ரீதியாக மிகவும் சவாலான நேரம். ஒரு நேரத்தில் ஒரு படியாக, நெருப்பாக அதைக் கொண்டு வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.